Random Video

மலேஷியா சென்றுள்ள ரஜினிகாந்திற்கு பிரும்மாண்ட வரவேற்பு- வீடியோ

2018-01-05 3 Dailymotion

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழா தொடர்பாக ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் சங்க கட்டிடடம் கட்ட நிதி திரட்டும் வகையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது. இன்று நட்சத்திர கிரிக்கெட், கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுகிறது. கலைவிழாவில் ஆன்மீக அரசியல் தலைவர் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
அரசியல் அறிவிப்பு அறிவித்த கையோடு மலேசியா சென்றுள்ள ரஜினிகாந்துக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்ததும் வருக வருக என்று மட்டும் ட்வீட்டிய கமல் ஹாஸனையும், சூப்பர் ஸ்டாரையும் ஒரே மேடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். நட்சத்திர கலைவிழாவில் தல, தளபதியை மட்டும் ஒரே மேடையில் பார்க்க முடியாது. காரணம் இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம். தளபதி விஜய் சீனா செல்ல வேண்டியுள்ளதால் கலைவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையாம். தல குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவார் என்று கூறப்படுகிறது.

Rajinikanth had agrand welcome at malaysia when he landed. He has gone there to attend the film festival that has been conducted to raise money for a new building construction for the film association. It is reported that Rajini Kanth as well as Kamal Hassan is attending the show along with almost 100 other stars and celebrities. But then Both Vijay and ajith will not be attending the show.