Random Video

நாச்சியார் : பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன்

2018-02-17 983 Dailymotion

எளிய மனிதர்கள், காக்கிச் சட்டைகள், ஒரு புறம் மனித மிருகங்கள், இன்னொரு பக்கம் மனிதாபிமானிகள், போகிற போக்கில் முகத்தில் அறைந்து செல்லும் யதார்த்தங்கள் என வாழ்வின் பல கூறுகளை பாலாவின் பெரும்பாலான படங்களில் பார்க்கலாம். ஒரு சில படங்களில் இவற்றுக்கு இடையே வன்முறை மிகுந்திருக்கும்... நாச்சியாரும் இந்த வரையறையிலிருந்து தப்பவில்லை. பாலாவிடமிருந்து அவரது பாணியில், ஆனால் கொஞ்சம் அவசரமாக வந்திருக்கும் படம், நாச்சியார். உதவி ஆணையர்கள் ஜோதிகாவும் ராக்லைன் வெங்கடேஷும் 'ஒரு மைனர் ரேப் கேஸை'க் கையாள நேர்கிறது. கேஸில் தொடர்புடைய ஜிவி பிரகாஷ் - இவானா இருவருமே காதலர்கள். பதின்ம வயதின் எல்லையில் நிற்பவர்கள், விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பதினாறே வயதில் இவானா கருவுற்றிருக்கிறாள். வழக்கை விசாரிக்கும்போதுதான். அந்தக் கருவுக்கு யார் காரணம் என்பது தெரிகிறது. அவனைக் கண்டுபிடித்து என்ன செய்கிறார் நாச்சியார் என்பதுதான் மீதி. இளையராஜாவின் இசை ஆர்ப்பாட்டமில்லாமல், தேவையான இடத்தில் மட்டும் உணர்வுகளை கதறவிடுகிறது. குறிப்பாக ஜிவி - இவானா காதல் மற்றும் க்ளைமாக்ஸில். ஒரே ஒரு பாடல்தான் என்றாலும், அபார இனிமை. ஆனால் அதைக் கூட முழுமையாக வைக்கவில்லை பாலா என்பதுதான் குறை.
ஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையின் மறுபக்கம், சட்ட - காவல் துறையின் இயல்புத் தன்மை கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. சதீஷ் சூர்யா எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளுக்கு பாலாவுடன் போராடி கத்தரி போட்டிருக்கலாம்.
ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு பாலாவிடமிருந்து ஒரு பாஸிடிவ் க்ளைமாக்ஸ் படம் என்பதே பெரிய ஆறுதல்தான். ஆனால் இன்னும் எதிர்ப்பார்த்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன் தற்பொழுது பார்க்கலாம்.

Nachiyar box office collection details.