Random Video

அமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரிய அதிபரும் விரைவில் சந்திப்பு- வீடியோ

2018-03-09 894 Dailymotion

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மிரட்டல்களால் எலியும் பூனையுமாக இருந்த டொனால்டு ட்ரம்ப், கிம் ஜாங் உன் இருவரிடையேயனோ சந்திப்பு மே மாதத்திற்குள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதை வடகொரியா வாடிக்கையாக வைத்துள்ளது. ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எல்லாம் அவ்வளவு தான் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் மிரட்டல் விடுத்து வந்தார்.