Random Video

கருணாநிதி 102-வது பிறந்த நாள்! தஞ்சை ஆணழகன் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு!

2025-06-30 16 Dailymotion

தஞ்சாவூர்: ஆணழகன் போட்டியில் தஞ்சாவூரை சேர்ந்த விக்டர் என்பவர் வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. 

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். 

இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திமுக கட்சி சார்பில் நேற்று ஜூன் 29 ஆம் தேதி ஆணழகன் போட்டி நடைபெற்றது. மருங்குளம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் திறன் மற்றும் அழகை வெளிப்படுத்தினர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ஐந்து பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் விக்டர் என்பவர் தஞ்சாவூர் மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர்.