இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 ம் திகதி லண்டன் நகரில் இந்தியத் தூதரகம் முன்பாக மருத்துவர் பினாயக் சென் அவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளான மருத்துவர்கள், மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் இந்தியாவில் நடந்து வரும் அடக்குமுறைகள் எல்லை மீறி மருத்துவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் மீது முறையற்ற வழியில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டித்து முழக்கமிட்டனர்.